திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையம் திறப்பு: முதல்வர் பங்கேற்பு

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனைய திறப்பு விழாவில் முதல்வர் பங்கேற்கிறார்.
திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையம் திறப்பு: முதல்வர் பங்கேற்பு

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனைய திறப்பு விழாவில் முதல்வர் பங்கேற்கிறார்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1200 கோடியில் புதிய முனையம் அமைக்கும் பணியை கடந்த 2019-ஆண்டு பிப். 10-ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி வாயிலாக தொடக்கி வைத்தார். இப் பணிகள் 2021-ஆவது ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் முடித்து புதிய முனையத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வர  விமானநிலைய ஆணையக் குழுமம் திட்டமிட்டிருந்தது.

ஆனால், கரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிகள் முற்றுப்பெறாத நிலையில் 2021, 22, 23 ஆகிய மூன்றாண்டுகளும் தள்ளிப்போயின. அடுத்தடுத்து 2 அல்லது 3 முறை திறப்பு விழாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிலையிலும் பணிகள் முடிவடையாததால் திறப்பு விழா நடத்தப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, கூடுதலான பணியாளர்கள் மூலம் கடந்த சில மாதங்களாக இரவு, பகலாக நடைபெற்ற பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.  

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 2-ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார். பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். 

இந்த நிலையில், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையத்தை இன்று அமைச்சர் கே.என். நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, மேயர் அன்பழகன், அரசு அலுவலர்கள், விமானநிலைய அலுவலர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனைய திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ளதை அமைச்சர் கே.என். நேரு உறுதிபடுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com