கட்சியினருக்கு திமுக வேண்டுகோள்
புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வரவேண்டாம் என திமுக தலைமை வேண்டுகோள்விடுத்துள்ளது.


புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வரவேண்டாம் என திமுக தலைமை வேண்டுகோள்விடுத்துள்ளது.
2023-ம் ஆண்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) விடைபெறுகிறது. நாளை நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கப்போகும் 2024-ம் ஆண்டை வரவேற்க உலகமே தயாராகி வருகிறது. நாடு முழுவதும் நாளை நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்ட உள்ளன. தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வரவேண்டாம் என திமுக தலைமை வேண்டுகோள்விடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைமை வெளியிட்ட அறிக்கையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வருவதை, அமைச்சர் பெருமக்கள், சட்டப்பேரவை- நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள் கட்டாயம் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த 17, 18 ஆகிய இரு தினங்கள் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, தாமிரவருணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப் பாதிப்பால் தென் மாவட்ட மக்கள் வாழ்வாதாரங்களை இழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...