வங்கிக் கணக்கில் ரூ.500 வைத்திருந்த விவசாய சகோதரர்களுக்கு அமலாக்கத் துறை சம்மன்: வலுக்கும் கண்டனம்

வங்கிக் கணக்கில் ரூ.500 மட்டுமே வைத்திருந்த விவசாய சகோதரர்களிடம் சட்டவிரோத பணிப்பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்திய அமலாக்கத் துறைக்கு பல தரப்பிலும் கண்டனம் வலுத்து வருகிறது. 
வங்கிக் கணக்கில் ரூ.500 வைத்திருந்த விவசாய சகோதரர்களுக்கு அமலாக்கத் துறை சம்மன்: வலுக்கும் கண்டனம்

சேலம்: வங்கிக் கணக்கில் ரூ.500 மட்டுமே வைத்திருந்த விவசாய சகோதரர்களிடம் சட்டவிரோத பணிப்பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்திய அமலாக்கத் துறைக்கு பல தரப்பிலும் கண்டனம் வலுத்து வருகிறது. 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன், கிருஷ்ணன். சகோதரர்களான இவர்களுக்கு காரணத்தையே குறிப்பிடாமல் ஜூலை 5 ஆம் தேதி இரண்டும் பேரும் சென்னைக்கு வரவேண்டும் என சாதிப் பெயரை குறிப்பிட்டு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

இதையடுத்து, பதற்றமான சகோதரர்கள் இரண்டு பேரும் ஆதார் அட்டை மற்றும் வங்கிக்கு கணக்கு புத்தகத்துடன் சென்றுள்ளனர்.  

பாஜக நிர்வாகி உதவியுடன் 6.5 ஏக்கர் நிலத்தை அபகரிக்க சிலர் முயற்சிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். 

வங்கி கணக்கில் ரூ.500 மட்டுமே வைத்திருந்த நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துறை தலைவரிடன் அவர்கள் புகார் அளித்துள்ளனர். 

இந்த நிலையில், சாதிப் பெயரை குறிப்பிட்டு வங்கிக் கணக்கில் ரூ.500 மட்டுமே வைத்திருக்கும் விவசாய சகோதரர்களிடம் சட்டவிரோத பணிப்பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்திய அமலாக்கத் துறைக்கு பல தரப்பிலும் கண்டனம் வலுத்து வருகிறது. 

எழுதப் படிக்கத் தெரியாத வயதான விவசாயிகள் இரண்டு பேரையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மிரட்டி துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதையடுத்து காவல் துறை விசாரணைய தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com