திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

இபிஎஸ் அணி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் ஒத்திவைப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக இபிஎஸ் அணி வேட்பாளர் கே.எஸ். தென்னரசு வெள்ளிக்கிழமை பகல்  வேட்புமனு தாக்கல் செய்வதாக அறிவித்து இருந்த நிலையில், மனுத்தாக்கல் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

News image

இபிஎஸ் அணி வேட்பாளர் கே.எஸ். தென்னரசு

Updated On :3 பிப்ரவரி 2023, 12:54 pm IST

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக இபிஎஸ் அணி வேட்பாளர் கே.எஸ். தென்னரசு வெள்ளிக்கிழமை பகல்  வேட்புமனு தாக்கல் செய்வதாக அறிவித்து இருந்த நிலையில், மனுத்தாக்கல் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிட கடந்த மாதம் 31 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 20 பேர் வியாழக்கிழமை வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், பிரதான கட்சிகளான காங்கிரஸ், அதிமுக இபிஎஸ் அணி, அமமுக வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதிமுக இபிஎஸ் அணி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்றும், வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான, வரும் 7ஆம் தேதி மனு தாக்கல் செய்வார் என்றும் அக்கட்சித் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன், அமமுக வேட்பாளர் எ.எம்.சிவபிரசாந்த் ஆகியோர் வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் வெள்ளிக்கிழமை காலை முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் சந்தித்து பேசிய நிலையில், அதிமுக இபிஎஸ் அணி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.