எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஈரோடு கிழக்கு நட்சத்திரப் பேச்சாளர்கள்: இபிஎஸ் தரப்புக்கு மட்டும் அனுமதி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் இபிஎஸ் தரப்புக்கு மட்டும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. 

News image
Updated On :8 பிப்ரவரி 2023, 8:07 am

DIN

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் இபிஎஸ் தரப்புக்கு மட்டும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து அங்கு வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசு, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழா் கட்சி சார்பில் மேனகா உள்பட 62 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. 

இடைத்தேர்தலையொட்டி கட்சிகள் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில், அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் தரப்பிலும் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வழங்கப்பட்டது.

Story image

இதில், இபிஎஸ் தரப்புக்கு மட்டும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இபிஎஸ் தரப்பு வழங்கிய பட்டியலில் இடம்பெற்றவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அனுமதி வழங்கியுள்ளது.

முன்னதாக, ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரின் தரப்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இபிஎஸ் அளித்த ஆதரவு கடிதத்தின்படி தேர்தல் ஆணையம் இபிஎஸ் தரப்பு வேட்பாளரை அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.