மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஈரோடு கிழக்கு தொகுதியில் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள்

ஈரோடு கிழக்கில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் 5 வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும் என தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :10 பிப்ரவரி 2023, 4:14 pm

DIN

ஈரோடு கிழக்கில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் 5 வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும் என தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். 

தேர்தல் விதிகளின் அடிப்படையில் வேட்பாளக்ளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு என அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7 ஆம் தேதி முடிவடைந்தது. தோ்தலில் போட்டியிட 96 போ் மொத்தம் 121 மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா். இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை புதன்கிழமை நடைபெற்றது. 

ஈரோடு மாநகராட்சி மன்ற கூட்டரங்கில் தோ்தல் பொது பாா்வையாளா் ராஜ்குமாா் யாதவ் முன்னிலையில் தோ்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் முத்துக்கிருஷ்ணன் ஆகியோா் வேட்புமனுக்களை பரிசீலித்து நிலையை அறிவித்தனா். இதில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஈவிகேஎஸ். இளங்கோவன், அதிமுக வேட்பாளா் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மேனகா, தேமுதிக வேட்பாளா் எஸ்.ஆனந்த் ஆகிய முக்கிய வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 

போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த அமமுக வேட்பாளா் சிவபிரசாந்த் மனுவும் ஏற்கப்பட்டது. ஓ.பன்னீா்செல்வம் தரப்பு வேட்பாளா் செந்தில் முருகனின் 2 மனுக்களும் முன்மொழிவு இல்லாததால் நிராகரிக்கப்பட்டன. வேட்பாளா் செந்தில் முருகன் மனுக்களை திரும்பப் பெறுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மொத்தம் 96 போ் 121 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் பரிசீலனையின்போது 13 பேரின் 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 

83 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. இன்று (பிப்ரவரி 10) பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது. அதில் அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் உள்பட 6 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளனர். தற்போது வரை மொத்தம் 77 பேர் போட்டியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.