மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பரமத்திவேலூர்: சிறுத்தைப் புலியைப் பிடிக்க அமைச்சர் தலைமையில் ஆலோசனை

பரமத்திவேலூரில் சுற்றித் திரியும் சிறுத்தைப் புலி: அமைச்சர், ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

News image
Updated On :10 பிப்ரவரி 2023, 8:53 am

DIN

பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள கபிலர்மலை சுற்றுப்பகுதிகளில் சுற்றித் திரியும் சிறுத்தைப் புலியை பிடிப்பது தொடர்பாக, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆகியோர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மதிவேந்தன், மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தை புலியை பிடிக்க முதுமலை, ஆனைமலை, தேனி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற குழுக்களும், முதுமலை பகுதியிலிருந்து வனவிலங்கு நடவடிக்கை அறிந்த மாலைவாழ் பகுதியைச் சேர்ந்தவர்களும் மற்றும் வனஉயரடுக்கு படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளது.

விரைவில் சிறுத்தைப் புலி பிடிக்கப்படும். சிறுத்தைப் புலியைப் பிடிக்க கூண்டுகளை அதிகப்படுத்தவும், கண்காணிப்பு கேமராக்கள் அதிகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில், வனவிலங்கு சிறப்பு மருத்துவர்கள் மற்றும் வனத் துறையினர் கலந்து கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.