பர்கூர் அருகே தீயணைப்புத் துறை வீரர்களிடம் பிடிபட்ட மூன்று மலைப் பாம்புகள் 

பர்கூர் அருகே சுமார் 13 நீளமுள்ள 3 மலைப் பாம்புகளை தீயணைப்புத் துறை வீரர்கள் பிடித்தனர்.
பர்கூர் அருகே தீயணைப்புத் துறை வீரர்களிடம் பிடிபட்ட மூன்று மலைப் பாம்புகள் 

பர்கூர் அருகே சுமார் 13 நீளமுள்ள 3 மலைப் பாம்புகளை தீயணைப்புத் துறை வீரர்கள் பிடித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மூன்றில் இரண்டு பகுதி காடுகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு யானை, மான், மயில், எறும்புத்தின்னி,  காட்டுப்பன்றி,  உடும்பு,  சிறுத்தை, மலைப் பாம்பு  காட்டு மாடு,  முயல் போன்ற எண்ணற்ற வனவிலங்குகள் வசிக்கின்றன. இவை அவ்வப்போது,  வனப்பகுதியில் இருந்து வெளியேறி , விலை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில்,  பர்கூர் அடுத்த எமக்கல் நத்தம் கிராமத்தில் உள்ள காந்தி நகரில் வசிக்கும் குண ரூபன்  என்பவரின் விளைநிலத்தில் வளர்த்து வந்த நாய்,  கன்றுக்குட்டி கடந்த சில நாள்களுக்கு முன்பு காணாமல் போனது.  இந்த நிலையில்,  நேற்று மாலை,  விளைநிலத்தில் மலைப் பாம்பு ஊர்ந்து செல்வதை குண ரூபன் கண்டார்.  மலைப்பாம்பை கண்டு அச்சமடைந்த அவர்,  இதுகுறித்து,  பர்கூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பெயரில் தீயணைப்பு நிலைய அலுவலர் தர்மலிங்கம் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் நிகழ்விடத்துக்கு விரைந்தனர். நீண்ட நேர தேடலுக்குப் பிறகு,  ஒரு பாதையின் இடுக்கில் மலைப் பாம்பு மறைந்திருப்பதை கண்டனர்.  இதை அடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம்,  அந்தப் பாறையை அகற்றி,  மலைப்பாம்பை பிடிக்க முயன்றனர்.

அப்போது,  அந்தப் பாதையின் இடுக்கில் மறைந்திருந்த சுமார் 13 நீளமுள்ள 3 மலைப் பாம்புகள் மறைந்து இருப்பதை கண்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவற்றை   உயிருடன் பிடித்து தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.  

ஒரே இடத்தில் மூன்று மலைப் பாம்புகள்,  பிடிபட்டுள்ளதை அறிந்த பொதுமக்கள்,  மலைப் பாம்புகளை ஆர்வத்துடன் கண்டு வியர்ந்தனர்.  பிடிபட்ட மலைப் பாம்புகள்,  இன்று காலை,  வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.  பிடிபட்ட இந்த மூன்று மலைப் பாம்புகளும்,  வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என வனத் துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com