தூத்துக்குடியில் ரயில் நிலையமாக மாறிய தனியார் பள்ளி!

தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ரயில்வே தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'மாதிரி ரயில் நிலையம்' அமைக்கப்பட்டது.
தூத்துக்குடியில் ரயில் நிலையமாக மாறிய தனியார் பள்ளி!

தூத்துக்குடி: தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ரயில்வே தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'மாதிரி ரயில் நிலையம்' அமைக்கப்பட்டது.

இந்த மாதிரி ரயில் நிலையத்தில், பயணச் சீட்டு முன்பதிவு செய்வது, ரயில் புறப்படும் நேரம், சேரும் நேரம் போன்ற விவரங்கள் மாணவர்களுக்கு விளக்கப்பட்டன. 

மாணவர்கள் அனைவரையும் நேரடியாக ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காண்பிப்பது கஷ்டமான காரியம் என்பதால், இதுபோன்று பள்ளியிலே மாதிரி ரயில் நிலையம் அமைத்து எவ்வாறு ரயில் பயணம் மேற்கொள்வது என்பது குறித்து மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது என்றார் பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ். 

நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் அகஸ்டின், உதவி தலைமை ஆசிரியர் விக்டர், மற்றும் லசால் குருஸ்புரம் தஸ்நேவிஸ் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர் லூர்து சாமி செய்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com