பெரம்பூர் நகைக்கடை கொள்ளை: மேலும் 5 பேரிடம் விசாரணை!
சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் மேலும் 5 பேரை பிடித்து காவல்துறை விசாரித்து வருகின்றது.


சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் மேலும் 5 பேரை பிடித்து காவல்துறை விசாரித்து வருகின்றது.
பிப்.10-ம் தேதி சென்னை பெரம்பூர் அடுத்து பெரவள்ளூர் நான்கு வழிச் சாலையில் உள்ள ஜெ.ம்.கோல்ட் பேலஸ் கடையின் ஷட்டரை வெல்டிங் வைத்து சுரங்கப்பாதை போல வழி அமைத்து உள்ளே சென்ற திருடர்கள், நகைக்கடையில், அதிக எடையுள்ள பெரிய நகைகளை மட்டும் திருடிச் சென்றனர்.
நகைக்கடையில் இருந்த சுமார் 9 கிலோ எடையுள்ள தங்க நகை மற்றும் 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், மேலும் வைர நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக, ஏற்கனவே இரண்டு பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது மேலும் ஐந்து பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...