புதுச்சேரியில் சிக்னலில் நின்றிருந்த புதிய காரின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாகன ஓட்டிகளின் உதவியுடன் போக்குவரத்து போலீசார் விரைந்து தீயை அணைத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு சிக்னலில் இருந்து விழுப்புரம் நோக்கி புதிய கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கார் இந்திரா காந்தி சிலை சதுக்கம் அருகே வந்தபோது சிக்னல் போடப்பட்டதால் சிக்னலில் நின்றது.
அப்போது காரின் முன்பகுதி என்ஜினில் இருந்து புகை வெளியே வந்து திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனே காரில் இருந்த நபர் விரைந்து இறங்கி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
சிக்னலில் நின்றபோது கார் தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகள் உதவியுடன் காரில் எரிந்த தீ விரைந்து அணைத்தனர். இதில் அதிஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் காரணமாக இந்திரா காந்தி சதுக்கம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிக்க | முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு! பேசியது என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சசிகுமாரின் வதந்தி - 2 டீசர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு... கண்ணீர் விட்டு கதறி அழுத பாஜக நிர்வாகி!

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
வீடியோக்கள்

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

"வெறுப்பு அரசியல் என்ற முள்ளை எடுக்கும் மலர்": சா.பீட்டர் அல்போன்ஸ் புகழாரம்
தினமணி வீடியோ செய்தி...

DMK vs CPIM: தொகுதிப் பங்கீட்டில் நடப்பது என்ன?
தினமணி வீடியோ செய்தி...

"இதழியல் வரலாற்றில் மைல்கல் ஈகைப் பெருநாள் மலர்": டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்
தினமணி வீடியோ செய்தி...

