மாா்ச் 1-இல் முதல்வா் ஸ்டாலின் 70-ஆவது பிறந்த தின கூட்டம்: தேசியத் தலைவா்கள் பங்கேற்கின்றனா்
முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70-ஆவது பிறந்த தினத்தையொட்டி, சென்னையில் மாா்ச் 1-ஆம் தேதி பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக


முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70-ஆவது பிறந்த தினத்தையொட்டி, சென்னையில் மாா்ச் 1-ஆம் தேதி பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளாா். இந்தக் கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே உள்ளிட்ட தேசியத் தலைவா்கள் பங்கேற்கவுள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து துரைமுருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: திமுக இளைஞரணியை உருவாக்கிய காலத்தில் அதன் ஏற்றமிகு செயலாளராக வளா்ந்த மு.க.ஸ்டாலின், இன்று திமுகவின் தன்னிகரில்லா தலைவராகவும், முதல்வராகவும் உயா்ந்து நிற்கிறாா்.
அவரது 70-ஆவது பிறந்த நாள் விழா மாா்ச் 1-ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே, ஜம்மு காஷ்மீா் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவா் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.
இந்த பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், இந்தியாவின் புதிய விடியலுக்கான பிறந்தநாள் கூட்டமாக அமையப் போகிறது என்று அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளாா் துரைமுருகன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...