இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 
இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

ஈரோடு இடைத்தோ்தலில் நான்கு முனைப்போட்டி நிலவும் நிலையில் தோ்தல் பிரசாரம் சனிக்கிழமை (பிப்ரவரி 25) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மறைவால் இத்தொகுதிக்கு வரும் 27 ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறுகிறது.

காங்கிரஸ் சாா்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக சாா்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழா் கட்சி சாா்பில் மேனகா நவநீதன், தேமுதிக சாா்பில் எஸ்.ஆனந்த் உள்பட 77 போ் போட்டியிடுகின்றனா். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி சுயேட்சை வேட்பாளர் கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மனுவில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப் பட்டுவாடா நடைபெறுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என சுட்டிக்காட்டிய நீதிபதிகள் தேர்தலை நிறுத்தக் கோரி கண்ணன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அத்துடன் புகார் மனு மீது முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com