ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்ய அறப்போர் இயக்கம் மனு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி அறப்போர் இயக்கம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஐஏஎஸ் அவர்களை சந்தித்து இன்று புகார் அளித்தது.

News image
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்ய அறப்போர் இயக்கம் மனு
Updated On :25 பிப்ரவரி 2023, 12:41 pm

DIN

சென்னை: மிகப்பெரிய அளவில் பணம் விளையாடி வரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி அறப்போர் இயக்கம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஐஏஎஸ் அவர்களை சந்தித்து இன்று புகார் அளித்தது.

அறப்போர் இயக்கம் சார்பில், சத்தியபிரதா சாகுவிடம் அளிக்கப்பட்ட புகார் மனுவில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்காளர்களுக்கு ஏராளமான பணம் கொடுக்கப்பட்டிருப்பதால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.

பணத்தைத் தவிர்த்து, குக்கர், கொலுசு, புடவை என வாக்காளர்களுக்கு, கட்சிகள் தரப்பில் ஏராளமான பரிசுப் பொருள்களும் வாரி வழங்கப்பட்டுள்ளன. பரிசுப் பொருள்கள் மற்றும் பணம் கொடுப்பதை விடியோ எடுக்கும் ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர். 

எனவே, இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி மக்கள் சுயமாக வேட்பாளரை தேர்வு செய்யும் வகையில் நடைபெறாது. பண சக்திதான் தேர்தலை இயக்கும். எனவே, இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.