/

அல்லி மலரும் அருமையான விடியோ: மா. சுப்பிரமணியன் டிவீட்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு, பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் ஈரோட்டில் முகாமிட்டுள்ளனர்.

News image
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்(கோப்புப்படம்).
Updated On :7 பிப்ரவரி 2024, 6:36 am

DIN


ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு, பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் ஈரோட்டில் முகாமிட்டுள்ளனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் இன்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு இடங்களிலும் பிரசாரம் மேற்கொண்டார்.

இந்த நிலையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தனது டிவிட்டர் பக்கத்தில், அல்லி மலரும் அருமையான விடியோவை பகிர்ந்துள்ளார்.

அதில், அவர் "இன்று காலை ஈரோட்டில் நாம் தங்கியிருந்த இடத்தில் எனது உதவியாளர்களில் ஒருவரான திரு.அருள்பிரகாசம் அவர்கள் "மலரும் பூ" ஒன்றினை தத்ரூபமாக படம் பிடித்துள்ளார்..." என்று பதிவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.