மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சென்னை மெட்ரோ ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு!

சென்னை மெட்ரோ ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

News image
சென்னை மெட்ரோ
Updated On :25 பிப்ரவரி 2023, 3:01 am

DIN

சென்னை மெட்ரோ ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னை போக்குவரத்துக்கு நெரிசலை குறைப்பதற்காக முதல்முதலாக 2015-ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் விமான நிலையம், பரங்கிமலை மற்றும் விம்கோ நகர் வரை இரு நிற வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஓராண்டாக மெட்ரோ ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகம் செல்வோரும், வீடு திரும்புவோரும் மெட்ரோ ரயில்களில் அதிகளவில் பயணிப்பதால் மிகுந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், கூடுதல் ரயில்களை இயக்க தொடர்ந்து பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தற்போது 3 பொதுப் பெட்டிகள் மற்றும் ஒரு பெண்கள் பெட்டி என மொத்தம் 4 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயிலில் கூடுதலாக இரு பெட்டிகளை இயக்க மெட்ரோ நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து சாத்தியக்கூறுகளை ஒரு மாதத்திற்குள் ஆராய்ந்து அறிக்கை அளிக்க வல்லுநர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.