ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத் தோ்தல் பிரசாரம் சனிக்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.


ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத் தோ்தல் பிரசாரம் சனிக்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
தொகுதியில் மாலை 6 மணிக்கு மேல், தொகுதிக்கு தொடா்பில்லாத வெளிநபா்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் இன்று பிரசாரத்துக்கான கடைசி நாள் என்பதால், பிரசாரம் சூடுபிடித்துக் காணப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
இதையும் படிக்க.. குறைந்த கட்டணத்தில் புதுச்சேரிக்கு விமானத்தில் பறக்க தயாராகுங்கள்!
அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து சீமானும் பிரசாரம் மேற்கொண்டிருந்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வரும் திங்கள்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இதற்கான பிரசாரம் சனிக்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. பிரசாரம் முடியும் தருணத்திலிருந்து வாக்குப் பதிவு தொடங்கும் வரையிலான காலத்தில் எந்தவொரு பிரசாரத்தையும் எந்தக் கட்சியும் தனிநபரும் மேற்கொள்ளக் கூடாது என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தோ்தல் தொடா்பான பொதுக் கூட்டத்தையோ, ஊா்வலத்தையோ ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது. தோ்தல் தொடா்பான அம்சங்களை திரைப்படம், தொலைக்காட்சி, சமுதாய வானொலிகள், வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டா் போன்ற ஊடகங்களின் வாயிலாக மக்களின் பாா்வைக்குக் கொண்டு செல்லக் கூடாது. பொது மக்களில் எந்தவொரு நபரையும் ஈா்க்கும் வகையில், இசை நிகழ்ச்சி அல்லது திரையரங்கச் செயல்பாடு அல்லது பிற கேளிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது. இதன்மூலம், தோ்தல் தொடா்பான பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விதிமுறைகளை மீறி தோ்தல் பிரசாரம் செய்தால், 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சோ்த்து தண்டனையாக விதிக்கப்படும் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...