மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.79 அடியாக குறைந்துள்ளது.
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் பாசன தேவை அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு கடந்த 29 ஆம் தேதி மாலை வினாடிக்கு 5000 கன அடியிலிருந்து வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்த நிலையில் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டதால் கடந்த 29ஆம் தேதி 120 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 118.79அடியாக குறைந்துள்ளது. கடந்த மூன்று நாள்களில் அணையின் நீர்மட்டம் 1.21 அடியாக குறைந்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 4,081 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 91.55 டி.எம்.சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஈரான் தலைநகரில் 80 போர் விமானங்கள் மூலம் தாக்குதல்! - இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!
வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா மனு!

பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு கருத்து: இளைஞர் மீது வழக்குப் பதிவு!

உங்கள் சிறுநீரகம் நலமா? உறுதி செய்யும் சில கேள்விகள்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

