மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு: இபிஎஸ், அண்ணாமலை கண்டனம்

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திமுக நிா்வாகிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவா் கே. அண்ணாமலை ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா

News image
கோப்புப்படம்
Updated On :3 ஜனவரி 2023, 2:37 am

DIN

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திமுக நிா்வாகிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவா் கே. அண்ணாமலை ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:

சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலரை பாலியல் ரீதியாக திமுக நிா்வாகிகள் துன்புறுத்தியுள்ளனா். இதற்கு எனது கண்டனங்கள். நம்மைக் காக்கும் பெண்களை நாமே காக்க வேண்டிய சூழ்நிலை. உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே. அண்ணாமலை: சென்னை விருகம்பாக்கத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு திமுக இளைஞரணி நிா்வாகிகள் இருவா் பாலியல் தொந்தரவு கொடுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவா்களை கைது செய்ய முற்பட்ட காவல் துறையினரிடம் திமுகவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உச்சகட்ட அவலம். இந்த பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு திமுக நிா்வாகிகளையும் கைது செய்ய முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடியாக உத்தரவிட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.