ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

என்னுடைய பாலிசி இதுதான்.. செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை பேச்சு

என்னுடைய பாலிசி, கட்சியில் இருந்து யார் விலகினாலும் அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதே எனது வாடிக்கை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

News image
அண்ணாமலை
Updated On :4 ஜனவரி 2023, 11:18 am

DIN

சென்னை: என்னுடைய பாலிசி, கட்சியில் இருந்து யார் விலகினாலும் அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதே எனது வாடிக்கை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து விலகியது குறித்து கேள்விகளை முன்வைத்த பத்திரிகையாளர்களுக்கு வெளிப்படையாக பதிலளிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

செய்தியாளர் சந்திப்பின்போது, காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து விலகியது குறித்து கருத்துக் கூறிய அண்ணாமலை, என்னுடைய பாலிசி, கட்சியிலிருந்து யார் விலகினாலும் அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதே எனது வாடிக்கை.

எங்குச் சென்றாலும் அவர்கள் நல்லா இருக்கட்டும், வாழ்க்கையில் நினைத்தது எல்லாம் கிடைக்கணும். கட்சியிலிருந்து வெளியே செல்வோர் என்னையோ, கட்சியையோ புகழ்ந்துவிட்டுச் செல்ல வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது.

மகளிர் அதிகளவில் பாஜகவை நோக்கி வருகிறார்கள். யாரோ ஒருவருக்கு பிடிக்கவில்லை என கட்சியை விட்டு போகிறார்கள் என்றால், எனக்கு எந்த வருத்தமும் கிடையாது என்று அண்ணாமலை கூறினார்.

YouTube video thumbnail

தொடர்ந்து, செய்திளார்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலாளிக்காமல் அண்ணாமலை வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகளும் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.