மேட்டூர் அணையின் நீர்மட்டம் 5 நாள்களில் 2.52 அடி சரிந்தது!
கடந்த 29 ஆம் தேதி 120 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் 5 நாள்களில் 2.52 அடி சரிந்துள்ளது.


கடந்த 29 ஆம் தேதி 120 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் 5 நாள்களில் 2.52 அடி சரிந்துள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு கடந்த 29 ஆம் தேதி வினாடிக்கு 5,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை நீர் திறப்பு வினாடிக்கு 10,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 3641 கன அடியிலிருந்து 3483 கன அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்த நிலையில் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு கூடுதலாக இருப்பதால் கடந்த 29 ஆம் தேதி 120 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 117.48 அடியாக சரிந்துள்ளது. கடந்த 5 நாள்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 2.52 அடி சரிந்துள்ளது.
அணையில் இருந்து கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
புதன்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 117.48 அடியாக இருந்தது அணைக்கு வினாடிக்கு 3483 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 89.50 டி.எம்.சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...