

மாற்றுத்திறனாளிகள் அணுகக் கூடிய வகையில் 442 தாழ்தள பேருந்துகள் ஏப்ரல் முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்து கொள்முதல் செய்ய உத்தரவிடக்கோரி வைஷ்ணவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில், சென்னையில் மட்டும் 37.4% பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் அணுகக் கூடிய வகையில் தயார் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.
மேலும், தாழ்தள பேருந்து மாற்றுத்திறனாளிக்கானது என்பது தவறு. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பேருந்தில் ஏறுவது இன்றவளவும் கடினமாக உள்ளதாக தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.