ஆர்டி மலையில் காளையர்களுக்குப் போக்கு காட்டிய காளைகள்: 21 பேர் படுகாயம்!
கரூர் மாவட்டம், தோகைமலை ஆர்டி மலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 21 இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.


கரூர் மாவட்டம், தோகைமலை ஆர்டி மலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 21 இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.
ஆர்டி மலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது. விராச்சிலேஸ்வரர் மற்றும் பிடாரி அம்மன் கோயில் முன் தொடங்கிய இந்த விழா கடந்த 12-ம்தேதி முதல் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றன.
தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கிய போட்டியில் 879 காளைகளுடன் 400 மாடு பிடி வீரர்கள் உறுதிமொழியேற்றனர். தொடர்ந்து போட்டியைக் குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி துவக்கி வைத்தார். இதையடுத்து கரையூரான் கோயில் மாடு முதன்முதலாக வாடிவாசல் வழியாகத் திறக்கப்பட்டது. இதையடுத்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன.
இதையடுத்து சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கினர். சில காளைகள் வீரர்களுக்கு போக்கு காட்டியது. பிற்பகல் 2 மணி வரை காளைகள் முட்டியதில் வடசேரி பள்ளி பட்டியைச் சேர்ந்த சிவக்குமார்(21) என்ற இளைஞரின் வலது கண் வெளியே வந்தது. உடனே அக்கம்பக்கம் நின்றிருந்த வீரர்கள் அவரை மீட்டு அங்கிருந்த 108 ஆம்புலன்சு மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 20 இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.
தொடர்ந்து போட்டிகள் நடந்து வருகிறது. மாலையில் சிறந்த காளைகளுக்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பரிசுகள் வழங்கி பாராட்ட உள்ளார். விழாவில் குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினர் மாணிக்கம், கரூர் மாவட்ட கூடுதல் காவல கண்காணிப்பாளர் கீதாஞ்சலி,
குளித்தலை கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதர் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.
போட்டியில் காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சையளிக்க 15 படுக்கைள், 14 மருத்துவ அலுவலர்கள், 8 செவிலியர்கள், 12 கிராம செவிலியர்கள், 3 ஆம்புலன்ஸ்கள் உள்பட 120 சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...