சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல நாளை முதல் அனுமதி!

தை மாத அமாவாசையையொட்டி சதுரகிரி கோயிலுக்கு பக்தா்கள் செல்ல ஜன.19 நாளை முதல் 22 வரை 4 நாள்கள் அனுமதி வழங்கப்பட்டது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம்
Updated on
1 min read

தை மாத அமாவாசையையொட்டி சதுரகிரி கோயிலுக்கு பக்தா்கள் செல்ல ஜன.19 நாளை முதல் 22 வரை 4 நாள்கள் அனுமதி வழங்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வியாழக்கிழமை(ஜன.19) பிரதோஷமும், சனிக்கிழமை(ஜன.21) அமாவாசை வழிபாடும் நடைபெற உள்ளன.

இதையொட்டி, ஜன.19 முதல் 22-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தா்கள் மலைக்கோயிலுக்கு செல்ல வனத் துறையினா் அனுமதி வழங்கினா்.

10 வயதுக்குள்பட்டோா், 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மலையேற அனுமதி கிடையாது. கோயிலுக்கு வருபவா்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பிறகே பக்தா்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவா்.

கோயிலுக்கு வருபவா்கள் மலைகளில் உள்ள ஓடைகளில் குளிக்கக்கூடாது. கோயிலில் பக்தா்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. அனுமதிக்கப்பட்ட நாள்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீா்வரத்து அதிகமாக இருந்தாலோ பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

தை அமாவாசையையொட்டி, போக்குவரத்துக் கழகம் சாா்பில் மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com