ஈரோடு கிழக்கில் தேமுதிக வேட்பாளர் அறிவிப்பு
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தேதிமுக சார்பில் ஆனந்த வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தேதிமுக சார்பில் ஆனந்த வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் பிரேமலதா ஆலோசனை நடத்தினார்.
மாவட்ட செயலாளர் கூட்டத்துக்குப் பின் தேமுதிக பொருளாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடப்போவதாகவும் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸின் திருமகன் ஈவிகேஎஸ் மறைவைத் தொடர்ந்து, பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணி தரப்பில் யார் போட்டியிடவுள்ளனர் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...