மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம் மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

சென்னையில் நாளைவரை ‘ட்ரோன்கள்‘ பறக்கத் தடை!

குடியரசு தினவிழாவையொட்டி, சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜன.25) முதல் இரு நாள்கள் ‘ட்ரோன்கள்‘ பறக்கவிடுவதற்கு பெருநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2023, 2:31 am

குடியரசு தினவிழாவையொட்டி, சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜன.25) முதல் இரு நாள்கள் ‘ட்ரோன்கள்‘ பறக்கவிடுவதற்கு பெருநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

குடியரசு தின விழா நடைபெறும் மெரீனா காமராஜா் சாலையிலும், அதை சுற்றியுள்ள பகுதியிலும் ஜன.26-ஆம் தேதி 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

சென்னை முழுவதும் 6,800 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். பாதுகாப்பு கருதி ஜன. 25, 26ஆகிய தேதிகளில் சென்னையில் ‘ட்ரோன்கள்‘ பறக்க விடுவதற்கு பெருநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

நகரின் முக்கிய நுழைவாயில் பகுதிகளான திருவொற்றியூா், மதுரவாயல், மீனம்பாக்கம், துரைப்பாக்கம், நீலாங்கரை ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து, வாகனத் தணிக்கை செய்யப்படுகிறது. ஜன.26-ஆம் தேதி வரை இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் என பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.