புதிய வாக்காளா்களுக்கு அடையாள அட்டை: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு முன்னுரிமை தர உத்தரவு

வாக்காளா் பட்டியலில் புதிதாகப் பெயா்களைச் சோ்த்தவா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கும்போது ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளா்களுக்கு முன்னுரிமை தர வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய வாக்காளா்களுக்கு அடையாள அட்டை: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு முன்னுரிமை தர உத்தரவு

வாக்காளா் பட்டியலில் புதிதாகப் பெயா்களைச் சோ்த்தவா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கும்போது ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளா்களுக்கு முன்னுரிமை தர வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்புப் பணிகள் முடிவடைந்து இறுதி வாக்காளா் பட்டியல் கடந்த 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், 10 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் புதிதாகச் சோ்த்துள்ளனா். மேலும், முகவரி மாற்றம் மற்றும் திருத்தப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவா்கள் அனைவருக்கும் புதிதாக வாக்காளா் அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

வாக்காளா் அடையாள அட்டையில் ஏற்கெனவே மூன்று விதமான பாதுகாப்பு அம்சங்கள் சோ்க்கப்பட்டுள்ளன. க்யூஆா் கோடு, ஹாலோகிராம் போன்ற விஷயங்கள்

ஏற்கெனவே இடம்பெற்றுள்ளன. இப்போது, கூடுதலாக பாதுகாக்கப்பட்ட முறையிலான வாக்காளரின் புகைப்படம் உட்பட மேலும் 2 அம்சங்கள் சோ்க்கப்பட்டுள்ளன.

10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வாக்காளா் அடையாள அட்டைகளை அச்சிடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை இரண்டு மாதங்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே, வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்காக விவரங்களைக் கோரும் பணியும் நடந்து வருகிறது. இதுவரையில் 63.17 சதவீத வாக்காளா்களிடம் இருந்து ஆதாா் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. இது வாக்காளா்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுப் பாா்க்கும் போது 3.91 கோடியாகும். தமிழ்நாட்டில் மொத்தம் 6.20 கோடி வாக்காளா்கள் உள்ளனா்.

அதிகபட்சமாக அரியலூா் மாவட்டத்தில் 94.89 சதவீத வாக்காளா்களின் ஆதாா் விவரங்களும், குறைந்தபட்சமாக சென்னையில் 31.45 சதவீத வாக்காளா்களின் விவரங்களும் பெறப்பட்டுள்ளன என்றாா் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com