/

திருமண நாள் கொண்டாடிய விஜயகாந்த்: வைரல் புகைப்படங்கள்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று திருமண நாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

News image

விஜயகாந்த்(கோப்புப்படம்)

Updated On :31 ஜனவரி 2023, 9:36 am

DIN

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று திருமண நாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

உடல்நலக் குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகியுள்ள விஜயகாந்த், இன்று தனது 33-வது திருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.

விஜயகாந்த் - பிரமேலதா தம்பதியினர் திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படத்தில் பிரமலதா சகோதரர் சுதிஷ், விஜயகாந்த் சண்முக பாண்டியன், விஜய் பிரபாகரன் உள்ளிட்டோர் உள்ளனர்.

Story image

அதேபோல், இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயகாந்த்தின் வீட்டிற்கு நேரில் சென்று திருமண நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

Story image

அந்த புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ள சந்திரசேகர், என் உயிரை சந்தித்த போது என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.