திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரையில் குறைந்தது!

திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரையில் குறைந்தது!

திருப்பூரில் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான நூல் விலை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரையில் குறைந்துள்ளது.



திருப்பூர்: திருப்பூரில் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான நூல் விலை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரையில் குறைந்துள்ளது.

திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சார்ந்த ஜாப்ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடைகள் உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருள் நூலாகும். 

தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து பின்னலாடைகளை உற்பத்தி செய்வது வழக்கமாகும். நூல் விலை உள்பட மூலப்பொருள்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு நூல் விலை அதிகரித்துக் காணப்பட்ட நிலையில் நிகழாண்டு ஜனவரியில் நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்திருந்தது. இதன் பின்னர் பிப்ரவரி முதல் ஜூன் வரையில் நல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது. 

இந்த நிலையில், ஜூலை மாதத்துக்கான நூல் விலையை நூற்பாலைகள் சனிக்கிழமை வெளியிட்டுள்ளன. இதன்படி, அனைத்து ரக நூல்களும் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரையில் குறைந்துள்ளது. தொழில்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நூல் விலை நிலவரம் (ஒரு கிலோ): 10 ஆவது நம்பர் கோம்டு நூல் ரூ.165-க்கும், 16 ஆம் நம்பர் ரூ.175-க்கும், 20 ஆவது நம்பர் கோம்டு நூல் ரூ.233-க்கும், 24 ஆம் நம்பர் ரூ.245-க்கும், 30 ஆம் நம்பர் ரூ.255-க்கும், 34 ஆம் நம்பர் ரூ.270-க்கும், 40 ஆம் நம்பர் ரூ.290-க்கும், 20 ஆம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.225-க்கும், 24 ஆம் நம்பர் ரூ. 235-க்கும், 30 ஆம் நம்பர் ரூ.245-க்கும், 34 ஆம் நம்பர் ரூ. 260-க்கும், 40 ஆம் நம்பர் ரூ.280-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com