பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நாட்டிலேயே அதிகளவில் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது தமிழகத்தில்தான்: முதல்வர்

நாட்டிலேயே அதிகளவில் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது தமிழகத்தில்தான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :2 ஜூலை 2023, 6:29 am

DIN

நாட்டிலேயே அதிகளவில் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது தமிழகத்தில்தான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆற்றிய உரையில், தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுகளுக்கு ஊக்கமளிக்கும் அரசாக அமைந்துள்ளது. நாட்டிலேயே அதிகளவில் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது தமிழகத்தில்தான். 

சிவகளை வாழ்விட பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்தபோது அங்கே செங்கல் வடிகாலில் தண்ணீர் சென்றுள்ளது. கீடியில் சேகரிக்கப்பட்ட மண மாதிரிகளை ஆய்வு செய்தபோது அங்கே நெல் மணிகள் பயிரிடப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளது.

தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது அறிவியல்பூர்வ ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. பார் முழுவதும் சென்று கொடிநாட்டிய தமிழரின் சிறப்பை காண வருகை தர வேண்டும். தொன்மைத் தமிழரின் பெருமை என்ற தலைப்பில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மொழி எப்போதும், எல்லோரையும் வாழவைக்கும். மொழியின் பெயரை பெயராக வைப்பதில் தமிழர்கள் முன்னோடி. தமிழ் மொழி என்பது நம்மை பொருத்தவரை எழுத்தாக இல்லாமல் ரத்தமாக உள்ளது. அதனால்தான் நாம் தமிழ் என்றால் உணர்ச்சிவசப்படுகிறோம். கடல் கடந்து வந்த பிறகும் தமிழ் மொழிக்காக விழா எடுக்கிறார்கள் தமிழர்கள். இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.