விஷம் வைத்து 20க்கும் மேற்பட்ட நாய்கள் கொலை: போலீசார் விசாரணை

விஷம் வைத்து 20க்கும் மேற்பட்ட நாய்கள் கொலை: போலீசார் விசாரணை

திருநெல்வேலியில் விஷம் வைத்து 20க்கும் மேற்பட்ட நாய்கள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
Published on


திருநெல்வேலி: திருநெல்வேலியில் விஷம் வைத்து 20க்கும் மேற்பட்ட நாய்கள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திருநெல்வேலி மேலப்பாளையம் அருகே மேலக்கருங்குளம் அமைந்து உள்ளது. விவசாய தோட்டங்கள் அதிகம் இருக்கும் இப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக நாய்கள் அதிகமாக வளர்க்கப்படுகிறது.

இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பல வீடுகளில் நாய்கள் காணவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, புதன்கிழமை காலையில் மேலக்கருங்குளம் ஊர் முழுவதும் ஆங்காங்கே 20க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து கிடந்தன. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊர் பொதுமக்கள் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

குறிப்பாக செல்வம் என்பவர் அவருடைய தோட்டத்தில் ஆடு வளர்த்து வருவதாகவும், அங்கு நாய்கள் வருவது ஆடு வளர்ப்பதற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி நாய்களுக்கு விஷம் வைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த நாய்களை அப்புறப்படுத்தும் தூய்மைப் பணியாளர்கள்.

பல நாய்கள் நீர் நிலைகளில் இறந்து கிடப்பதால் விஷம் நீரில் கலந்திருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதை மற்ற விலங்குகள் அருந்தும் முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், உயிரிழந்த நாய்களை உடல் கூறாய்வு செய்து, விஷம் வைத்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதனிடையே விலங்குகளுக்கு விஷம் வைத்து கொல்வது சட்டப்படி மிகப்பெரிய குற்றம் என்றும், இதற்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனைகள் வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com