எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட்டால் ஆட்சிப் பிடிக்க வாய்ப்பு: சுப்ரமணியன் சுவாமி

மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட்டால் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளது என பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.
சுப்ரமணியன் சுவாமி
சுப்ரமணியன் சுவாமி

திருப்பரங்குன்றம்: மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட்டால் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளது என பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.

சென்னையில் இருந்து வியாழக்கிழமை மதுரை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:

“மணிப்பூரில் மனித உரிமைகள் அதிக அளவு மீறப்படுகிறது. சீனா ஆதரவுடன் அங்கு கலவரம் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க செல்வதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இது வருத்தம் அளிக்கிறது. மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்று அவர் பார்க்கவில்லை. அங்குள்ள பிரச்னையை பிரதமர் சென்று சரி செய்ய முயற்சிக்க வேண்டும்.

வருகின்ற மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சியினர் எல்லோரும் ஒன்று சேர்ந்து வந்தால் வெற்றி பெற வாய்ப்புள்ளது. கோவில்கள் அனைத்தும் தற்போது வெளி கொண்டு வந்துள்ளோம். ஜாதி, மதம் இல்லாமல் அனைத்து இந்துக்களையும் ஒற்றுமையாக்க முயற்சி செய்தோம். பிரதமர் மோடி நல்லது செய்தார் என இங்குள்ளவர்கள் கூறுகின்றார்கள். அது ஏதும் உண்மையல்ல. அவர் எதுவும் செய்யவில்லை. ஆங்கிலேயர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் நமது கலாச்சாரத்தை கெடுத்து விட்டு சென்றுள்ளனர். அதை மீட்பதற்கு நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் இந்துக்களிடம் வந்துள்ளது அது பாஜகவுக்கு வாக்குகளாக கிடைக்கும்.

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டது. அப்போதைய மத்திய அமைச்சர் பிரபு படேல் இது குறித்து என்னிடம் கூறினார்.

மதுரை விமான நிலைய திறப்பு விழா நேரத்தில் மேடையில் பிரபு படேல் அறிவிக்க இருந்த நேரத்தில், அப்போது மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அதனை அறிவிக்க விடாமல் தடுத்தார்.

முத்துராமலிங்க தேவர் நாட்டின் விடுதலைக்காக போராடியவர். ராஜ குடும்பத்தை சேர்ந்தவர். அவரது பெயர் விமான நிலையத்திற்கு வைக்காதது வருத்தம் அளிக்கிறது. இதற்கு திமுக, அதிமுக யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இவர்கள் கடிதம் கொடுத்தால் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசி மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்க ஏற்பாடு செய்வேன். ஒருவருக்கொருவர் பொறாமையில் பேசி செயல்படுகின்றனர்.” என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com