முதல்வர் கோப்பை: ஜூலை 8 முதல் 11 வரை சென்னை மெரினாவில் பீச் வாலிபால் போட்டிகள்
சென்னை மெரினா கடற்கரையில் 2023 ஜூலை 8 முதல் 11 வரை பீச் வாலிபால் போட்டிகள் நடைபெறுகிறது.


சென்னை மெரினா கடற்கரையில் 2023 ஜூலை 8 முதல் 11 வரை பீச் வாலிபால் போட்டிகள் நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் கோப்பை-2023 மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் 17 இடங்களில் ஜூலை 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 38 மாவட்டங்களைச் சேர்ந்த 27,000க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்தப் போட்டிகள் ஜூலை மாதம் 25ஆம் வரை நடைபெறுகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் 2023 ஜூலை 8 முதல் 11 வரை தினமும் மாலை 4 மணி முதல் பீச் வாலிபால் போட்டிகள் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளில் மண்டல அளவில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் அணிகள் பங்கேற்க உள்ளனர். பள்ளி மாணவ, மாணவியர் பிரிவில் தலா 18 அணிகளும் கல்லூரி மாணவ, மாணவியர் பிரிவில் தலா 18 அணிகளும் விளையாடுகின்றன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...