மேல்பாதி திரௌபதி கோயில் விவகாரம்: கோட்டாட்சியர் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி அருள்மிகு ஸ்ரீதா்மராஜா திரெளபதி அம்மன் திருக்கோயில் வழிபாடு தொடர்பாக, ஒரு பிரிவினரிடம் வருவாய்க் கோட்டாட்சியர் அ.கு.பிரவீணாகுமாரி வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினார்.
மேல்பாதி திரௌபதி கோயில் விவகாரம்: கோட்டாட்சியர் விசாரணை

 
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி அருள்மிகு ஸ்ரீதா்மராஜா திரெளபதி அம்மன் திருக்கோயில் வழிபாடு தொடர்பாக, ஒரு பிரிவினரிடம் வருவாய்க் கோட்டாட்சியர் அ.கு.பிரவீணாகுமாரி வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினார்.

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீதா்மராஜா திரௌபதி அம்மன் கோயிலில் வழிபாடு செய்வது தொடா்பாக, இருவேறு சமுதாய மக்களிடையே ஏற்பட்ட பிரச்னை தொடா்பான பேச்சுவாா்த்தையில் சுமுகத் தீா்வு எட்டப்படாததால், கடந்த ஜூன் மாதம் 7 ஆம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.

பிரச்னைக்குள்ளான திரௌபதி அம்மன் கோயில் இருக்கும் இடம் தங்களுக்கு சொந்தமானது என இருசமூக மக்களும் கூறியதால்  கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருத்தரப்பினரிடையேயும் அப்போதைய வருவாய்க் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் விசாரணை நடத்தினார். 

இந்த விசாரணையின் போதும் இருத்தரப்பிலும் சுமூக முடிவு எட்டப்படாததால் மீண்டும் மறு விசாரணை நடத்தப்படும் என்றும் அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் வருவாய்க் கோட்டாட்சியர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியராகப் பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய வருவாய்க் கோட்டாட்சியராக அ.கு பிரவீணா குமாரி பொறுப்பேற்றார். 

இதைத் தொடர்ந்து, திரெளபதி அம்மன் கோயில் விவகாரம் தொடர்பாக 2 ஆம் கட்ட விசாரணை இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 7) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இருதரப்பினரிடையேயும் தனித்தனியாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள வருவாய்க் கோட்டாட்சியர் பிரவீணா குமாரி, முதல்கட்டமாக "அ" தரப்பைச் சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்களான 5 பேர் மட்டும் கோயில் நிலம் தொடர்பான உரிய ஆவணங்களுடன் 7 ஆம் தேதி காலை 11 மணிக்கு விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வ விளக்கத்தை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது சம்மந்தப்பட்ட 5 பேரும் ஆஜராகினர். இவர்களிடம் கோட்டாட்சியர் அ.கு. பிரவீணாகுமாரி விசாரணையை மேற்கொண்டார். இதில் வட்டாட்சியர் வேல்முருகன் மற்றும் அலுவலர்கள், காவல்துறையினர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com