கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஓ.பி. ரவீந்திரநாத் மேல்முறையீடு: தங்க தமிழ்ச்செல்வன் கேவியட் மனு தாக்கல்!

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓ.பி. ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்யவுள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தங்க தமிழ்ச்செல்வன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

News image
Updated On :11 ஜூலை 2023, 9:37 am

DIN

தேனி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பி. ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்யவுள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தங்க தமிழ்ச்செல்வன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில், தேனி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மகன் ப.ரவீந்திரநாத் வெற்றி பெற்றாா்.

அவரது வேட்புமனுவில் சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளதாகவும் தேனி தொகுதியில் அவா் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியும் தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவா், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 

இந்த வழக்கில் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தா் வியாழக்கிழமை அளித்த தீா்ப்பில், இந்த வழக்கில் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் சமா்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில், தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது எனக் குறிப்பிட்டுள்ளாா். 

மேலும் ரவீந்திரநாத் தரப்பு கோரிக்கைக்கு ஏற்ப உயா்நீதிமன்றத் தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தீா்ப்பை 30 நாள்களுக்கு நிறுத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். 

இந்நிலையில் ஓ.பி. ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்யவுள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தங்க தமிழ்ச்செல்வன் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தங்கள் தரப்பு முடிவை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க்கக்கூடாது என அவர் கேவியட் மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். 

2019 தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் தங்கத்தமிழ்ச் செல்வன் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.