நூலிழையில் உயிர் தப்பிய கல்லூரி மாணவன்: பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள்
கல்லூரி மாணவன் விபத்தில் சிக்கி, ஒரு வினாடியில் உயிர்தப்பிய சம்பவத்தின் பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருக்கின்றன.


வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில், இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த கல்லூரி மாணவன் விபத்தில் சிக்கி, ஒரு வினாடியில் உயிர்தப்பிய சம்பவத்தின் பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருக்கின்றன.
வேலூர் மாவட்டம் குடியாத்தம், காந்திநகர் பகுதியில் உள்ள அரசினர் திருமகள் ஆலை கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவன் ஹரிதாஸ். இவர் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்த பொழுது காட்பாடியில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்த வேன் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் கல்லூரி மாணவன் படுகாயம் அடைந்தார்.
இதையும் படிக்க.. ஆண் குழந்தைக்கே இன்னமும் ஆசைப்படுகிறார்கள் இந்தியர்கள்!
உடனடியாக இது குறித்து குடியாத்தம் நகர காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் காவல்துறையினர் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் மாணவனை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது விபத்து நடந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...