ஆடிப்பூர திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம்!
நெல்லை நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆடிப்பூர திருவிழாவின் 4ம் திருநாளில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.


நெல்லை நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆடிப்பூர திருவிழாவின் 4-ம் திருநாளில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் நான்காம் திருநாளான இன்று காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவையொட்டி காந்திமதி அம்பாள் மரக் கேடயத்தில் வெண்பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

தொடர்ந்து மேளதாளம் முழங்க காந்திமதி அம்பாள் சுவாமி சன்னதிக்கு சென்று அங்கு சுவாமியிடம் பட்டு வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைதொடர்ந்து ஊஞ்சல் மண்டபத்திற்கு மேலவாத்தியங்கள் இசைக்க எழுந்தருளிய காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு நலுங்கும், வளையல் அணிவிக்கும் உற்சவமும் நடைபெற்றது.
அதன்பின், அம்பாளுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...