பொது சிவில் சட்டத்திற்கு பாமக எதிர்ப்பு!

பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய சட்ட ஆணையத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். 
பொது சிவில் சட்டத்திற்கு பாமக எதிர்ப்பு!


சென்னை: பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய சட்ட ஆணையத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். 

நாட்டில் பல்வேறு மதங்கள் தங்களுக்கென வெவ்வேறு மதச் சட்டங்களைப் பின்பற்றுகின்றன. அதற்குப் பதிலாக அனைத்து மதத்தைச் சோ்ந்தவா்களுக்கும் திருமணம், விவாக ரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை தொடா்பாக நாடு முழுமைக்கும் ஒரே சட்டமாக பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவரப்படும் என பாஜக தோ்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு மத்திய சட்டத் துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கருத்துகளைக் கேட்டறிந்த 21-ஆவது சட்ட ஆணையம், அதுதொடா்பான ஆலோசனை அறிக்கையை கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியிட்டது. 

எனினும், மக்களின் கடும் எதிா்ப்பு, நீதிமன்ற வழக்குகள் காரணமாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள இயலவில்லை. 5 ஆண்டுகளுக்குப் பிறகு, மத்திய சட்ட அமைச்சகத்தின் மறுபரிந்துரையின் அடிப்படையில் இவ்விவகாரத்தில் பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகளிடமிருந்து புதிதாக கருத்துகளைக் கேட்க தற்போதைய 22-ஆவது சட்ட ஆணையம் தீா்மானித்தது. அதன்படி, பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள் 30 நாள்களுக்குள் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என சட்ட ஆணையம் கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் கருத்துகள் கேட்கப்பட்டு வந்த நிலையில், கருத்துக் கேட்புக்கான கால அவகாசத்தை ஜூலை 28-ஆம் தேதி வரை நீட்டித்து சட்ட ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய சட்ட ஆணையத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். 

அதில், நாட்டின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் என்று கூறிவிட்டு, ஒரே நாடு, ஒரே மொழி, ஒறே சிவில் சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வருவது இந்தியாவின் அடையாளமான பன்மைத்தன்மையை சிதைத்து விடும். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 

பொது சிவில் சட்டம் என்பது சிறுபான்மை சமுதாயத்தினரின் உரிமைகளை பறிப்பதுடன், இந்தியாவின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருக்கும் என்பதால் அதற்கான முயற்சியை சட்ட ஆணையம் கைவிட வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com