ராணிப்பேட்டை அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பதிவேடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அடுத்த குமணந்தாங்கல் கிராம ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதே கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பள்ளியின் பூட்டை உடைத்து புத்தகங்கள் மற்றும் வருகைப் பதிவேடுகளை தீயிட்டுக் கொளுத்திய அதே பகுதியைச் சேர்ந்த குமரேசன்(30) என்பவரை சனிக்கிழமை சிப்காட் போலீசார் கைது செய்தனர்.

மேலும், அரசுப் பள்ளியின் பதிவேடுகள், புத்தகங்களை தீயிட்டுக் கொளுத்தியது ஏன் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட தொடக்கப் பள்ளி கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் இப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

துறைமுக கால்பந்து போட்டி: சென்னை அணி சாம்பியன்!

திமுகவில் விருப்ப மனு அளிக்கும் காலக்கெடு மாா்ச் 6 வரை நீட்டிப்பு

மணிமுத்தாறு நூலகத்திற்கு பேரூராட்சி சாா்பில் ரூ.25,000 மதிப்பிலான புத்தகங்கள் அளிப்பு!

போலி பாஸ்போா்ட் மூலம் வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற இலங்கைப் பெண் கைது
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

