மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வுமுதல்வர் விஜய்யுடன் மாணிக்கம் தாகூர் சந்திப்பு!போர்ப் பதற்றம்! ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு!கண்ணியத்துடன் பேசுங்கள்: சட்டப்பேரவையில் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தல்பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் வேட்டியின் அளவு 4 முழமாகக் குறைப்பு: அமைச்சர்டாஸ்மாக் ஊழியர்களுக்கு நாளைமுதல் ஊதிய உயர்வு!தவெக அரசுடன் சென்னை மேயர் சேர்ந்து செயல்படுவதில்லை: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டுகொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? டிடிவி தினகரன் கேள்வி! தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்புகொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

மாணவர்களுக்கு உதவும் நடிகர் விஜய்: ஆளுநர் தமிழிசை பாராட்டு

மாணவர்களுக்கு உதவும் நடிகர் விஜய்க்கு தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநருர் தமிழிசை சௌந்தரராஜன்

Published On :2 பிப்ரவரி 2024, 12:49 am IST


புதுச்சேரி: மாணவர்களுக்கு உதவும் நடிகர் விஜய்க்கு தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு அரசியல் செய்யுங்கள் என காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, பேச்சு உரிமை  என்பது அனைவருக்கும் உண்டு. நான் எவ்வளவு பேச வேண்டும் என காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் முடிவு செய்ய முடியாது. அவர் சொல்வதை அவரது கட்சிக்காரர்களே கேட்க மாட்டார்கள். நான் எனக்கு விருப்பமானதை சொல்வேன். கேட்டால் கேட்கட்டும், கேட்காமல் போனால் போகட்டும் என்றார்.

மேலும் மாணவர்களுக்கு நடிகர் விஜய் உதவி செய்வதை பாராட்டுகிறீர்களா? என்ற கேள்விக்கு, இதை அரசியலாக பார்க்கவில்லை. படிப்பதற்கு யார் உதவி செய்தாலும் அதை நான் பாராட்டுவேன். நடிப்பவர்கள் கூட படிப்பவர்களுக்கு படிப்பை சொல்லிக் கொடுத்தால் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெற முடியும் என நினைக்கிறார்கள். சமுதாயத்தில் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்பதை அவர்கள்  உணர்ந்திருப்பதை நான் பாராட்டுகிறான்.

எதிர்க்கட்சியாக இருந்தாலும் எதிர் கொள்கையில் உள்ளவர்கள் என யாராக இருந்தாலும் படிப்புக்கு உதவி செய்தால் பாராட்டுவேன். அதில் உள்ள உள்நோக்கம் இல்லை என தமிழிசை தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.