மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை: தரவரிசை வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். 
மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை: தரவரிசை வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். 

தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவ கல்லூரிகளின் அரசு, நிா்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு இணையதளங்களில் விண்ணப்பிப்பது ஜூன் 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி, ஜூலை 12 மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஆா்வமாக விண்ணப்பித்தனா்.

அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களுக்கு 26,805 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,394 பேரும் என மொத்தம் 40,199 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், தகுதியான மாணவ, மாணவா்களின் தரவரிசைப் பட்டில் சென்னை கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு நினைவு உயா் சிறப்பு மருத்துவமனையில் இன்று வெளியிடப்பட்டது.

அரசு ஒதுக்கீடு, நிா்வாக ஒதுக்கீடு மற்றும் அரசு பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு 40,913 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கவுன்சிலிங் 20ஆம் தேதி தொடங்குகிறது. 

தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் மருத்துவ இடங்களை நிரப்ப கவுன்சிலிங் நடக்கவுள்ளது. 5,050 எம்பிபிஎஸ் இடங்களும், 200 பிடிஎஸ் இடங்களும், 150 இஎஸ்ஐ இடங்களும் உள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில், சேலத்தைச் சேர்ந்த கிருத்திகா 569 மதிப்பெண் பெற்று தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். பொதுகலந்தாய்வில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் பிரபஞ்சன் 720 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். 

தருமபுரி பச்சையப்பன் 565 மதிப்பெண்களுடன் 2ஆம் இடம் பிடித்துள்ளார். மேலும் காஞ்சிபுரம் முருகன் 560, திருவண்ணாமலை மாணவி ரோஜா 544, சிவகங்கை அன்னப்பூரணி 538 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 7.5% இட ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மொத்தம் 606 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com