ஒரத்தநாடு: டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் போராட்டம்!

ஒரத்தநாடு கடைவீதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடைபெற்றது.
ஒரத்தநாடு: டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் போராட்டம்!

ஒரத்தநாடு கடைவீதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் காவல்துறையினருக்கும், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு நகர மன்னார்குடி பிரிவு சாலை கடை வீதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை கடைவீதியில் பொது மக்களுக்கும், மாணவ - மாணவியர்களுக்கு, போக்குவரத்து இடையூராக உள்ளதால் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என ஏற்கனவே போராட்டம் நடத்திய நிலையில் இந்த கடை மார்ச் மாதத்திற்கு உள்ளாக அப்புறப்படுத்தும் என காவல்துறையினரும் வருவாய்த்துறையினரும் உத்தரவாதம் அளித்தனர்.

இந்த நிலையில் தற்போது வரை இந்த கடை அப்புறப்படுத்தாமல் உள்ளதால் சாலை கடந்து செல்லக்கூடிய கடைவீதிக்கு வரக்கூடிய பொதுமக்கள், மாணவ மாணவிகள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள இந்த டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி ஒரத்தநாடு அண்ணா சிலையிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் 100 மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை நேரடியாக முற்றுகையிட்டு பூட்டு போட முற்பட்டனர். 

அப்போது வட்டாட்சியர் சுரேஷ், ஒரத்தநாடு காவல் துணை கண்காணிப்பாளர் பிரசன்னா உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டகார்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் இது தொடர்பாக அமைதி பேச்சு வார்த்தை கோட்டாட்சியர் தலைமையில் நடத்தி உரிய தீர்வை எடுக்கலாம் எனக் கூறியுள்ளனர். இதை ஏற்றுக்கொண்டு கலைந்து செல்ல முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது  பேரிகார்ட் வைத்து தடுத்த காவல் துறையினருக்கும் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன் பிறகு கடை முன்பு அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த போராட்டத்தை மீண்டும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதின் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com