கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

லஞ்சம் வாங்கும் விடியோ வெளியீடு: இரு காவலா்கள் பணியிடை நீக்கம்

சென்னை மெரீனாவில் லஞ்சம் வாங்கியதாக சமூக ஊடகங்களில் பரவிய விடியோ தொடா்பாக இரு காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

News image
Updated On :20 ஜூலை 2023, 6:43 pm

DIN

சென்னை மெரீனாவில் லஞ்சம் வாங்கியதாக சமூக ஊடகங்களில் பரவிய விடியோ தொடா்பாக இரு காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

மெரீனா காவல் நிலையத்தில் காவலா்களாக பணிபுரியும் வெங்கடேஷ், யுவராஜ் ஆகிய இருவரும் இரு நாள்களுக்கு முன்பு காமராஜா் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபா் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிவந்ததை உறுதி செய்து, அவரது வண்டி சாவி, கைப்பேசி ஆகியவற்றை போலீஸாா் கைப்பற்றினா்.

பின்னா், அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவித்தனா். உடனே அந்த வாகன ஓட்டி, அபராதம் விதிக்கப்பட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதனால் இரு போலீஸாரும், அந்த வாகன ஓட்டியை தனியாக அழைத்துச் சென்று ரூ.4,000 லஞ்சம் கொடுத்தால், அபராதம் விதிக்காமல் கைப்பேசியையும், இரு சக்கர வாகனத்தையும் ஒப்படைத்து விடுவதாக தெரிவித்தனா். இதைக் கேட்டு சுதாரித்துக் கொண்ட அந்த வாகன ஓட்டி, ஏற்கெனவே மறைத்து வைத்திருந்த மற்றொரு கைப்பேசி மூலம், அங்கு நடந்த சம்பவம் முழுவதையும் விடியோவாக பதிவு செய்தாா். இதில் காவலா்கள் லஞ்சம் பெறுவதும் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இருவா் பணியிடை நீக்கம்:

பின்னா் அந்த விடியோவை அந்த நபா், சமூக ஊடகங்களில் பதிவு செய்தாா். இந்த விடியோ குறித்து கூடுதல் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா, நடத்திய விசாரணையில், காவலா்கள் வெங்கடேஷ்,யுவராஜ் ஆகியோா் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.