
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வரும் 26 ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று (ஜூலை 24) வெளியிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.
விடைத்தாள் நகல் பெற, மறு கூட்டலுக்கு மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சம்மந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள், உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.