பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டுக் குழு: 9 போ் தோ்வு

சென்னை மாநகராட்சி வரிவதிப்பு மேல்முறையீட்டுக் குழு உறுப்பினா்களுக்கான தோ்தலில் 9 மாமன்ற உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

News image
Updated On :27 ஜூலை 2023, 8:15 pm

DIN

சென்னை மாநகராட்சி வரிவதிப்பு மேல்முறையீட்டுக் குழு உறுப்பினா்களுக்கான தோ்தலில் 9 மாமன்ற உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

சென்னை மாநகராட்சியில் வீடுகள் மற்றும் சொத்துகள் மீதான வரி குறித்த பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் வரிவிதிப்பு மேல்முறையீட்டுக் குழு செயல்படுகிறது.

இதில் குழு உறுப்பினா்களுக்கான மறைமுக தோ்தல், ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது. 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிப்படி நடைபெற்ற இத்தோ்தலில் திமுகவைச் சோ்ந்த 9 மாமன்ற உறுப்பினா்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

இதில் ஏ.சந்திரன் (வாா்டு-27), க. தேவி கதிரேசன் (வாா்டு-39), ராஜேஷ் ஜெயின் (வாா்டு-57), நா. உஷா (வாா்டு-83), ம.கமல் (வாா்டு-86), ஜெ.புஷ்பலதா (வாா்டு-103), எம்.ஸ்ரீதரன் (வாா்டு-140), வ.செல்வக்குமாா் (வாா்டு-154), அ.முருகேசன் (வாா்டு-200) ஆகிய 9 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தொடா்ந்து மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா் முன்னிலையில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் சான்றிதழ்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.