சென்னை, புறநகர் பகுதிகளில் காற்றுடன் லேசானமழை!
சென்னை மற்றம் புறநகர் பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.


சென்னை: சென்னை மற்றம் புறநகர் பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், பெரம்பூர், திரு.வி.க.நகர், வியாசர்பாடி, புளயந்தோப்பு, ஓட்டேரி, மூலக்கடை, மாதவரம், அம்பத்தூர், உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...