ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருப்பூர் மாவட்டத்தில் 620 பள்ளிகள் திறப்பு

திருப்பூர் மாவட்டத்தில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் இயங்கும் 620 பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

News image
Updated On :12 ஜூன் 2023, 5:52 am

DIN

திருப்பூர் மாவட்டத்தில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் இயங்கும் 620 பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. 

தமிழகத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் செயல்படும் பள்ளிகள் திங்கள்கிழமையும், 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையில் செயல்படும் பள்ளிகள் வரும் புதன்கிழமை முதல் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. 

இந்த அறிவிப்பின்படி, திருப்பூர் மாவட்டத்தில் அரசு உயர்நிலைப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் என மொத்தம் 620 பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதில், திருப்பூர் மாநகரில் உள்ள ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்சி.அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் மாணவ, மாணவியர் உற்சாகமாக பள்ளிக்குச் சென்றனர். 

இந்த மாணவர்களை பள்ளி நிர்வாகம் சார்பில் மிட்டாய், இனிப்பு கொடுத்து வரவேற்கப்பட்டது. முன்னதாக  மாவட்ட கல்வித்துறை உத்தரவின்பேரில் பள்ளிகளில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டதுடன், வகுப்பறைகள், சமையலறைகள், கழிவறைகள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.