டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ். விஜயன் மீண்டும் நியமனம்!

தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ். விஜயன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 

News image
ஏ.கே.எஸ். விஜயன்
Updated On :14 ஜூன் 2023, 12:17 pm

DIN

தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ். விஜயன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 

நடப்பாண்டு ஜூன் 16 ஆம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவதையடுத்து மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு இதுகுறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

மன்னார்குடியைச் சேர்ந்த ஏ.கே.எஸ். விஜயன், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் முதல் தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக இருந்து வருகிறார். 

முன்னதாக, இவர் திமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.  கடந்த 1999, 2004, 2009 ஆகிய மக்களவைத் தேர்தலில் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாகப்பட்டினம் திமுக மாவட்டச் செயலராகவும் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.