காணொலி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்!

மருத்துவமனையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி காணொலி மூலம் நீதிபதி அல்லி முன்பு ஆஜார்படுத்தப்பட்டார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மருத்துவமனையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி காணொலி மூலம் நீதிபதி அல்லி முன்பு ஆஜார்படுத்தப்பட்டார். 

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பாக இன்று நடைபெற்றது. 

அதில் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவனைக்கு மாற்ற அவரது தரப்பு கோரிக்கை வைத்த நிலையில், அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்கவும், அமலாக்கத்துறை தனியாக மருத்துவக்குழு ஒன்றை ஏற்படுத்தி, அவரது உடல்நிலையை காவேரி மருத்துவமனையில் பரிசோதிக்கலாம் என்றும் கூறியுள்ளது. 

இந்நிலையில், மருத்துவமனையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி காணொலி மூலம் நீதிபதி அல்லி முன்பு ஆஜார்படுத்தப்பட்டார்.  சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன் விசாரணை நடைபெற்று வருகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் தமிழகம் வந்தபோது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். உள்துறை அமைச்சர் வந்த அடுத்த நாள் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை அமைப்புகளை ஏவல் அமைப்பாக மத்திய அரசு பயன்படுத்துகிறாது என்று செந்தில் பாலாஜி தரப்பு வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ வாதிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com