டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ஆட்டோ ஓட்டும் ஆசிரியர்

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ஆட்டோ வாங்கி, அதனை இயக்கி வருகிறார் இடைநிலை ஆசிரியர் தினகரன்.

News image
அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ஆட்டோ ஓட்டும் ஆசிரியர்
Updated On :16 ஜூன் 2023, 12:11 pm

DIN

வேலூர்: அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ஆட்டோ வாங்கி, அதனை இயக்கி வருகிறார் இடைநிலை ஆசிரியர் தினகரன்.

பள்ளிக்கு மாணவர்கள் வர காலதாமதம் ஆவதால் தனது சொந்த செலவில் ஆட்டோ வாங்கி, மாணவர்களுக்காக இயக்கி வரும் ஆசிரியரின் சேவையை வெகுவாக பாராட்டுகிறார்கள் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த டாஸ்மார்பெண்டா மலை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் இந்த கிராமத்திலிருந்தும், இதற்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும் சுமார் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர். 

இந்த கிராமத்திற்கு அருகே உள்ள கொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தினகரன். இவர், இதே பள்ளியில் ஒன்றாம் வகுப்பு ஆசிரியராக கடந்த 10ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர 3 முதல் 4 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நடந்து வருவதால் குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வர முடியாத சூழ்நிலை இருந்து வந்து. இதனால்  ஆசிரியர் தினகரன், தனது சொந்த செலவில் பயணியர் ஆட்டோவை வாங்கி, அதை பள்ளிக் குழந்தைகளுக்காக தினமும் இலவசமாக இயக்கி வருகிறார்.

Story image

காலை7.30 மணிக்கு இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வரும் தினகரன், பள்ளியில் இருந்து ஆட்டோவை எடுத்துச் சென்று சாமஏரி, கொல்லைமேடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து  வரும் பள்ளிச் சிறுவர்களை, ஆட்டோவில் அழைத்து வந்து படிக்க வைத்து வருகிறார்.

காலையில் 9 மணிக்கு தொடங்கும் பள்ளிக்கு, முன்னதாக 7.30 மணிக்கு வந்து பள்ளி மாணவர்களை தினந்தோறும் ஆட்டோவில் அழைத்து வந்து பாடம் கற்பிக்கும் இவருடைய சேவையை மாணவர்களின் பெற்றோர்களும் கிராம மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.